வெள்ளி, 13 ஜனவரி, 2012

என் வீட்டுத் தோட்டத்தில்....

வீட்டுத் தோட்டம் போடுவது என்பது எனக்கு சிறு வயதில் இருந்தே பிடித்த விஷயம். ஆனால் இந்த பெருநகர வாழ்வில் அதுவும் தொடர்மாடி மனை வாழ்வில் அது அவ்வளவு சாத்தியப்படவில்லை. சொந்த வீடு வாங்கியதும் (தொடர்மாடி வீடு தான் ) இருக்கும் கொஞ்ச இடத்தில் தொட்டி வைத்தாவது ஏதேனும் வளர்ப்போமே என்று எண்ணினோம்.
வைத்திருந்த சின்ன சாடிகளை எல்லாம் என் அத்தையிடம் (என் மாமியார் தான் ஆனால் மாமியார் தனம சிறிதும் இல்லாதவர் இவரை பற்றி தனி பதிவு ஒன்று போடுகிறேன் ) சரண்டர் பண்ணிவிட்டு பெரிய தொட்டிகள் வாங்கினோம்.

எதோ பல ஏக்கர் விவசாயம் பண்ணப்போகும் விவசாயிகள் போல என்ன பயிரிடலாம் என்ற மந்திராலோசனை நடந்தது. தக்காளி, வெங்காயம், நெல், சோளம் இப்படி எல்லாம்  யோசித்து பின்னர் "ஆசை இருக்கு அரசாள அதிஷ்டம் இருக்கு கழுத மேய்க்க" என்று நினைத்துக் கொண்டு முதலில் ஒரு பசளி தண்டை  ஏக மனதாக முடிவு செய்து நட்டோம். அது வளர்ந்து வரும் போதே எங்கள் வீட்டுக்கு உதவிக்கு வரும் அம்மாள் சமையலுக்கு வாங்கிய பாகற்காயின் சில விதைகளை போட அதுவும் வளர்ந்தது. இப்போது கொஞ்சம் உற்சாகத்துடன் பயற்றம் விதைகளும் போட்டேன் அதுவும் வளர்கிறது.
இதை பார்த்த என்னவர் இன்னும் ஒரு சாடி வாங்கி அதில் தனியாக தக்காளி பயிரிடோம்.

சரி இப்போ எதுக்கு இந்த ராமாயணம் என்று கேக்கிறீங்களா? அத்தானே சொல்ல வந்தேன்... இதெல்லாம் பயிராகி பலன் தர தொடங்கிரிச்சு  ஏற்கெனவே பாகற்காய் சமையல் பண்ணி சாப்பிட்டாச்சு.


 இன்னைக்கு பசளி போட்டு பருப்பு செய்தேன். இத ஊரெல்லாம் சொல்லி முடிக்கட்டி சாமி குத்தமாகிராது?!!! அது தான் (ஸ்ஸ்ஸ்ஸ் ப்ப்ப்ப்பா... எப்பிடி எல்லாம் பதிவு தேத்த வேண்டி இருக்கு...)


இன்னும் மத்ததெல்லாம் பலன் கொடுக்குதா இல்ல பல்லிளிக்குதான்னு அடுத்தடுத்து சொல்லுறேன்..

2 கருத்துகள்:

  1. எனக்கும் தோட்டமென்றால் பிரியம், ஆனால் அடுக்குமாடியில் இங்கு வசதியில்லை.
    ஆனாலும் மாடத்தில் பூமரங்களுடன் தக்காளி, செலறிக் கீரை, புதினா ஒருதடவை மிளகாய், பாகற்காயும் ஆய்ந்துள்ளேன்.
    முயற்சி செய்யுங்கள்; மனதுக்கு இதமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ....
    உண்மை தான் நீங்கள் சொல்வது.

    பதிலளிநீக்கு