
அனைவருக்கும் இனிய அட்சய திருதியை வாழ்த்துக்கள்.........
இன்றைய நாளில் செய்யும் செயல்கள் சிறக்கும் என்பதும் வாங்கும் பொருள்கள் பெருகும் என்பதும் நம்பிக்கை..... (ஆனால் நகை வாங்க உகந்த நாளாக மட்டும் இன்றைய நாள் அடையாளப்படுதப்படுவது
ஒரு வியாபாரத்தந்திரம் )... இருப்பவர்கள் நகையும் வாங்குங்கள் பரவாயில்லை ஆனால் இல்லாத ஒருவருக்கு ஒரு வேளை உணவளிப்பதோ, ஒரு ஏழை குழந்தைக்கு புத்தகம் வாங்கிக்கொடுப்பதோ அல்லது வஸ்திர தானம் செய்வதோ நமக்கு பெரும் புண்ணியத்தை கொண்டு தரும். இன்றைய நாளில் வரும் புண்ணியமும் பெருகத்தானே செய்யும்? :))
இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
இது பாரதி வாக்கு.....
நகைகள் வாங்கி பூட்டிகொள்வதால் நமக்கு மட்டுமே மகிழ்ச்சியும் லாபமும் (இது சிலசமயம் நட்டமாவதும் உண்டு )
அதே நேரம் அனைவராலும் செய்யக்கூடியதுமில்லை ஆனால் நான் சொல்வது சாத்தியமானது தானே?
இன்றைக்கும் என்றைக்கும் நல்லா நாளாக அமைய வாழ்த்துக்கள்.....
உண்மைதான் தோழி நீங்கள் சொல்வது சரி நல்ல நாளாக அமையட்டும் இன்நாள் ஆனால் வியாபாரத்தை மையப்படுத்துவதை நானும் வெறுக்கிரேன்!
பதிலளிநீக்குநீங்களும் வலைப்பூவில் இருப்பது இப்போது தான் தெரியும் அதனால் தான் சொல்லவில்லை....
பதிலளிநீக்குதமிழ்மணத்தில் இணைத்திருக்கிறேன்.. எனது கருத்தை புரிந்துகொண்டதற்கு நன்றி நேசன் ......
Good one...:)
பதிலளிநீக்கு