திங்கள், 9 ஆகஸ்ட், 2010

பெயரிடவில்லை.....

எழுதனும் எழுதனும் என்று நினைச்சாலும் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து முடியாமையே இருந்தது ..... கடைசியில இன்னைக்கு ஒருவழியா வாய்ச்சிருக்கு....

இந் இடுகைக்கு பெயரிடவில்லை
(
ஏன்னா என்ன பெயர் வைக்கன்னு தெரியல்ல )
சில சின்ன சின்ன விஷயங்கள பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்....

*போன மாசம் நம்ம ரங்கஸ் ஆபீஸ்ல அன்னுவல் டூர் போய் இருந்தோம்(பொலன்னறுவ ) ஹோட்டல் ரிசெப்ஷன் எல்லாம் நல்லா தான் இருந்துது ஆனா ரூம் ஒண்ணுமே உருப்படி இல்ல, ஒரு மாசத்துக்கு முன்னாடியே கிளீன் பண்ணி பூட்டி வச்ச ரூம அப்பிடியே திறந்து தந்தாங்க, சண்டை போட்டு வேற ரூம் வாங்கிக்க வேண்டியதாப்போச்சு...

*சாப்பாடு வாய்ல வைக்க முடியல்ல. டைனிங் எ ஹால் போனதுல இருந்து வரும் வரைக்கும் திட்டிகிட்டே இருந்தோம் .....

*வேற வேற பேருல ஒரே ஐட்டத்த மாத்தி மாத்தி வச்சு கொலை பண்ணிட்டாங்க....

*இந்த ஹோட்டலுக்கு யாருங்க ஸ்டார் அதுவும் பைவ் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தது???????????

*மத்தபடி சுற்றுபுறம் ரொம்ப நல்லாவே இருந்துது அதுவும் ஹோட்டலுக்கு எதிர்ல இருந்த லேக் ரொம்ப , இருந்தது.... அது தான் இங்க இருந்த ஒரே ஆறுதல்.
---------------------------------------------------------------------------------------------------

அமிர்தன் இப்ப ரொம்ப பெரிய ஆளா ஆகிட்டாரு... தானா அப்பாவோட கம்ப்யூட்டர் சேர் மேல ஏறி மவுஸ் தட்டுராறு.....
அவர சமாளிக்கிரதுக்குள்ள எனக்கு முழி பிதுங்குது (ஆனாலும் ரசிக்கத்தான் தோணுது )
-----------------------------------------------------------------------------------------------------
இராவணன் படம் பார்த்தோம்......( "என்னது காந்தி செத்துட்டாரா " அப்பிடின்னெல்லாம் கிண்டல் பண்ணப்படாது நானே 3 மாசம் கழிச்சு பதிவு போடுறேன் ஆமா சொல்லிபுட்டேன் ) எனக்கு பிடித்தது, அமிர்தன் ரொம்ப ரசிச்சு கைதட்டி பார்த்தான் :) (அவன் தியேட்டரில் பார்க்கும் இரண்டாவது படம் இது ...... )


இன்னும் நிறைய கதை இருக்கு ..... அதை எல்லாம் அடுத்த பதிவுல சொல்லுறேன் இப்போதைக்கு தொடரும் போட்டுக்கறேன் (அப்பாடா ஒரு தொடரும் போட்டாச்சி :) )

வெள்ளி, 14 மே, 2010

எனக்கென்ன பயம்.....

ஒரு நீண்ட பாதை
தனியே நான் பயணித்துக் கொண்டே இருக்கிறேன்
இருட்டறைகள் - அதில்
மோதிச் செல்லும் வௌவால்கள் .

ரோஜா மலர்ப் பாதைகள் - அதில்
தைக்கும் முட்கள் .

சஹாரா பாலை
பிருந்தவனச் சோலை

இன்னும் பயணிக்கிறேன் நான்
என் பாதையில்
என்னோடு பயணிக்க .....

என்விரல்களை கோர்த்துக்கொள்ளும் துணிவும்
களைத்து விழுகையில் தோள் தரும் பரிவும்
உண்மையிலும் உண்மையான காதலும்
யாருக்கிருந்தலும்
வரலாம்

வரும் வரை ...
பயணிக்கிறேன் ..
தனியே நான்
எனக்கென்ன பயம் !!!

டிஸ்கி :
ரொம்ப நாளைக்கு முன்னர் எழுதியது இது....
பழைய டயரிகளை புரட்டிய போது தட்டு பட்டது பதிவாக இட்டு இருக்கிறேன்.
எப்படி இருக்கிறது ?

திரும்பி வந்துட்டனே............

"ரொம்ப நாளா ஒன்னும் எழுதக்காணோம்?? என்ன ஆச்சு?? "
இப்பிடி அப்துல்லா அண்ணா கேட்டாங்க......... எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் இருந்துது கொஞ்சம் வெட்கமாவும் இருந்துது.

(சந்தோசம்: நம்மளையும் மதிச்சி கேட்டிருக்காறேன்னு தான்
வெட்கம்: நம்ம சோம்பேறி தனத்த நெனைச்சி தான் )

இனிமேல் எப்படியாவது நேரம் ஒதுக்கி எழுதனும்னு முடிவு பண்ணிட்டோமில்ல.
அது மாத்திரம் இல்ல நாள் தவறாம எல்லாரோட ப்ளோக்கயும் படிச்சிப்புட்டு பின்னூட்டம் போடாம விட்ட சோம்பேறித்தனத்தையும் விட்டுட்டு நல்லா பிள்ளயாகிட்டேன்.
அப்பிடின்னு இத்தால் தெரிவிச்சிக்கிறேங்க..........

புதன், 13 ஜனவரி, 2010

தைப்பொங்கல்

பொதுவாக நான் எல்லா பண்டிகைகளையும் முறையாக கொண்டாட ஆசைப்படுவேன் .கல்யாணம் ஆகும் வரைக்கும் அப்பா அம்மா தம்பி தங்கை என்று எல்லோரையும் பெண்டு நிமிர்த்தி வேலை வாங்கி முடிந்தவரை சிறப்பாக கொண்டாடுவேன் (எங்கள் வீட்டில் அனைவரும் கொஞ்சம் அமைதியான சுபாவம் என்னை தவிர ). சின்னப் பெண்ணாக இருக்கும் போது தாத்தா ,பாட்டி, ,அப்பா ,அம்மா எல்லோரிடமும் இதற்கு என்ன அர்த்தம் அதற்கு என்ன அர்த்தம் என்று குடைந்து கொண்டே இருப்பேனாம், கொஞ்சம் வளர்ந்ததும் நானே வாசித்து பொருள் விளங்கி செய்ய ஆரம்பித்தேன்.

கல்யாணம் ஆனா பின் இப்போது நம்ம ரங்கமணி தனியாக மாட்டிக்கொண்டார். எல்லா பண்டிகை விழாக்களையும் எனக்கு தேவையான படி செய்து முடிக்க உதவி செய்தே அவருக்கு நுரை தள்ளிவிடும் (இருந்தாலும் கொஞ்சமும் முகம் சுளித்ததோ சலித்து கொண்டதோ இல்லை) . இந்த இரண்டரை வருடத்தில் எல்லா பண்டிகைகளையும் என் மனம்போல நிறைவேற்றி தந்திருக்கிறார்.

இந்த வருடம் எங்கள் புது வரவான அமிர்தவர்ஷன் உம் இருப்பதால் அவரின் முதல் தைப்பொங்கலை நன்றாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்.
எப்படி கொண்டாடினோம் என்பதை நாளை மறுநாள் சொல்கிறேன் .

நாளை பிறக்கவிருக்கும் தைத்திருநாள் அனைவருக்கும் நல்ல வளங்கள் அனைத்தையும் நல்கும் நல்லதோர் வருடத்தின் ஆரம்பமாக இருக்க எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .

வாழ்த்துக்களுடன்
சுதர்ஷினி ,ரமேஷ் மற்றும்

வெள்ளி, 1 ஜனவரி, 2010

வாழ்த்துக்கள்..........


பிறந்திருக்கும் இந்த புது வருடம் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் தரும் இனிய வருடமாக அமைய வாழ்த்துக்கள்......

என்றும் அன்புடன்
சுதர்ஷினி ரமேஷ் மற்றும் அமிர்தவர்ஷன்