வெள்ளி, 27 ஜனவரி, 2012

பொங்கல் + கல்யாணம்

வாசல் நிறைய கோலம் போட்டு அது நடுவிலசெங்கல் அடுப்பு கட்டி அது மேல  மண் பானை வச்சி,பொங்கல் பொங்கின நாட்கள நினைச்சிகிட்டு.... வாசல் கோலம் போட்டு காஸ் அடுப்பில பொங்கல் வச்சி பொங்கல் நாளை இனிதாக முடிந்த வரை முறையாக கொண்டாடினோம். புது வீட்டில் வரும் முதல் பொங்கல் என்பதாலும் அகிலவர்ஷினி பிறந்த பின் வரும் முதல் பொங்கல் என்பதாலும் இது எங்களுக்கு மிக விஷேசமான பொங்கல் தான்.(ரொம்ப லேட்டா பொங்கல் பதிவு போடுரளேன்னு நினைக்க வேணாம் நமக்கு அம்புட்டு வேலை இருந்துச்சாக்கும்)...
இதில் ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகவும் வருத்தமாகவும் இருக்கு 
வாசல்ல பொங்கல் வைப்பது என்பது தொடர்மாடி வீடுகளில் அனேகமாக சாத்தியம் இல்லை தான் எனினும் நேரத்துக்கு கூடவா பொங்கல் வைக்க முடியாது? சில வீடுகளில் 9  மணிக்கு தான் பால் அடுப்பில் ஏறியது.... என்ன கொடுமை சூரியபகவானே இதுன்னு நினைச்சுகிட்டேன்...
              ***********************************************************

நமக்கு ரொம்ப வேலை இருந்துச்சுன்னு சொன்னேனேன் இல்லையா அது வேற ஒன்னும் இல்லீங்க என் ஒரே தங்கையின் திருமண வேலைகள் தான்...
மேடம் கல்யாணம் ஆனா கையோட நியுசிலாந்து  போகப் போறாங்க....
கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சுது...
என் கல்யாணத்தில அழுவாச்சி படலமே இருக்கல்ல ஆனா மேடம் தூர தேசம் போறா படியால எங்கம்மா ஒரே அழுவாச்சி.... அப்புறமா கஷ்டப்பட்டு skype போட்டு தரேன்னு சொல்லி சமாதானப்படுத்தி வச்சிருக்கேன்.
ஜோக்ஸ் அபார்ட்... எனக்கும் கவலை தான் நானும் தங்கையும் சகோதரிகள் என்பதை விட நல்ல தோழிகள்  என்பது தான் பொருந்தும்...  அவள் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்று நிறைய ஆசை பட்டது நான் தான் ஆனால் திருமணத்தின் பின் அவள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்றுவிடுவாள் என்பது என் பெரிய வருத்தம். ஆனாலும் என்ன அவள் மனம் போல் நல்ல வாழ்வு அமைந்தது மகிழ்ச்சி... அவள்  என்றென்றும்  மகிழ்ச்சியாக இருக்க இறைவன் அருள்வானாக...

தங்கைக்காக இந்தப் பாடல் 

                        *******************************************************


6 கருத்துகள்:

  1. பொங்கல் ஞாயிற்றுப் பொழுதில் வந்திருப்பதால் அடுக்கு மாடியில் இருப்போர் அமைதியாக தூங்கியிருப்பார்கள் அதனால் சூரிய பகவான் தெரிந்து இருக்கமாட்டார்.ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  2. கடல் கடந்து போகும் தங்கைக்கு கடல் கடந்தவனின் காலம் தாழ்த்திய கலியாண வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.காலம் எல்லாம் கவலையின்றி கைகோர்த்து இருங்கள் என்று.

    பதிலளிநீக்கு
  3. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பலவிடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  4. நானும் லேட் பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்...;) நான் கல்யாணம் முடிஞ்சு கெளம்பினப்ப என் தங்கை அழுத நினைவு வந்துடுச்சு... sisters are always special...Happy Married life wishes to your little sister

    பதிலளிநீக்கு
  5. வாங்க நேசன்.உங்கள் வாழ்த்துக்களை தங்கையிடம் சொல்லிவிட்டேன் ... நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கு நன்றி அப்பாவி அக்கா ... கொசுவத்தி சுத்திசாக்கும் :)))))

    பதிலளிநீக்கு