புதன், 20 ஜூன், 2012

ஏன் இப்படி ????



நான் : ஹலோ ஆஷா...(பெயர் மாற்றப்பட்டுள்ளது.) எப்பிடி இருக்க?


ஆஷா : ஹலோ சொல்லு நான் நல்ல இருக்கேன்..


நான்:நம்ம ...... தோழியோட அப்பா இறந்துட்டாருன்னு சொன்னேனே நம்பர் கூட அனுப்பினேன் போன் பண்ணியா?


ஆஷா : ஆஆ ஆமாண்டி நீ அனுப்பின ஆனா  நான் தான் மறந்துட்டேன்...


நான் : என்னடி நீ.. நாம எவ்வளவு க்ளோஸ் friends இப்பிடி சொல்லலாமா? உனக்கு வீடு கூட பக்கம் தானே...


ஆஷா : ஆமா... எங்க டி மகளோட ஸ்கூல் வேலைகளால மறந்திருச்சி...
நான் : (மனதிற்குள்)சாவ விசாரிக்க கூட நேரமில்லாம போக அப்பிடி என்ன டி படிக்கிறா  உன் மக (மகள் படிப்பது 2ம்  வகுப்பு என்பதை அறிக )


-----------
-----------
நான் : ஆமா எப்பவுமே நான் தான் பேசுறேன் நீ சும்மா கூட போன் பண்ண மாட்டியா?


ஆஷா : போன் பண்ணி என்ன தான் பேச??????


நான் : ங்கே .............

இது எனக்கும் என் தோழி ஒருவருக்கும் நடந்த தொலைபேசி உரையாடல்...
இதில் வரும் இன்னொரு தோழியும் எங்களுடன் படித்தவர் நாங்கள் 5 பேர் மிக நெருங்கிய தோழிகளாக இருந்தோம்... அப்படி ஒரு தோழியின் தந்தையின் மரணத்தை தான் போன் பண்ணி விசாரிக்கவும் மறந்து விட்டதாக சொல்கிறாள்..
இத்தனைக்கும் எத்தனையோ முறை இவருக்கு உதவிகளும் .... 7 மணி நேரம் பயணப்படவேண்டிய பயணத்தை கூட பிற்போட்டு இவரின் ஆறுதலுக்காக வேண்டி இவரை உற்சாகப்படுத்தி பேசி பேசி தெளிய வைத்த என்னிடம் "போன் பண்ணி என்ன தான் பேச " என்று கேட்கிறாள்...
பெண்கள் திருமணத்தின் பின்னர் நட்பு வட்டத்திலிருந்து சற்று விலகுவது இயல்பு . அதற்கு பலதரப்பட்ட காரணங்கள் உண்டு என்றாலும் இவளையும் இவள் குடும்ப பின்னணியையும் நன்கு அறிந்தவள் என்ற காரணத்தினால் இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை..

ஒரே ஒரு கேள்வி தான் "என் இப்படி ????"
------------------------------------------------------------------------------------------------------------

நான் சீரியல் பார்ப்பதில்லை  (கேபிள் கூட கிடையாது ) ஆனால் இலங்கை தமிழ் சேனல்களிலும் சில இந்திய சீரியல்களை போடுகிறார்கள்... சில நேரம் எதற்காவது சேனல் மற்றும் போது  வரும்.  பார்க்கும் போதே கலக்கமாக இருக்கும்...  ஒருவர் அழுகிறார் அல்லது சவால் விடுகிறார்...அல்லது  யாரையாவது கொல்லவோ பழிவாங்கவோ திட்டமிடுகிறார்...
ஏங்க இங்க நமக்கு நம்ம பொழப்ப பார்க்கவே நேரம் சரியா இருக்கு இதுல இவங்க பிரச்சின வேற பார்க்கனுமா ... ஆனா இதயும் பல பேரு உக்காந்து பார்க்கிரகளே.....
என் இப்பிடி??? (எனக்கும் அழுவாச்சியா வருது...)
------------------------------------------------------------------------------------------------------------
விஷயம் கிடைக்கும்போது எழுத நேரம் இல்லாமல் போகும் ஆனா எழுதனும்னு வந்து உக்காந்தா...எதுவுமே உருப்படியா நினைவுக்கு வருதில்லையே... பதிலுக்கு தூக்கம் தான் வருது..
என் இப்படி??? (அவ்வ்வ்வவ்வ்வ்வ்)
இப்ப உங்களுக்கு "உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுதுன்னு" பாட்டு ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை ...

11 கருத்துகள்:

  1. வார்தை முட்டுது பாட்டு!ஹீ அபிராமி அபிராமிதான் !ஹீ

    பதிலளிநீக்கு
  2. பெண்கள் திருமணத்தின் பின்னர் நட்பு வட்டத்திலிருந்து சற்று விலகுவது இயல்பு . அதற்கு பலதரப்பட்ட காரணங்கள் உண்டு என்றாலும் இவளையும் இவள் குடும்ப பின்னணியையும் நன்கு அறிந்தவள் என்ற காரணத்தினால் இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை..

    ஒரே ஒரு கேள்வி தான் "என் இப்படி ????"//ம்ம் அதுதான் பெண் வாசல் தாண்டிவிட்டாள் எல்லாம் வாய்த்தவன் இடமாம் எங்கேயோ படித்தேன்!
    -------------------

    பதிலளிநீக்கு
  3. ஆனா இதயும் பல பேரு உக்காந்து பார்க்கிரகளே.....
    என் இப்பிடி??? (எனக்கும் அழுவாச்சியா வருது...)
    ---------------------------------------------------------//ம்ம் அவங்கள் எல்லாம் திருந்தாத விட்டில் பூச்சிகள்§ பாவம்!

    பதிலளிநீக்கு
  4. நான் : என்னடி நீ.. நாம எவ்வளவு க்ளோஸ் friends இப்பிடி சொல்லலாமா? உனக்கு வீடு கூட பக்கம் தானே...
    // அந்த தோழி அறிவுச்சோலைப்பூவா தோழி !ம்ம்

    பதிலளிநீக்கு
  5. ஆம்....! நான் கூட சில சீரியல்களைப் பார்த்து ஏமாந்தவன் தான்...! பார்ப்பவர்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு இவர்கள் பண்ணும் கூத்து சகிக்க முடியவில்லை. நாம் அடுத்தது என்ன என்று சில விடயங்களை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்போம். ஆனால் இயக்குனர் அந்த விடயங்களை அப்படியே விட்டு விட்டு ஒரே தாவாக தாவிவிடுவார்....! போதுமடா சாமி என்று இப்போது நான் தமிழில் GAME SHOWS, செய்திகள் மற்றும் விவாத நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கிறேன். நீங்களும் என்னைப் பின் பற்றலாம்...! ( அவற்றிலும் ஒரு குறை..... சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களை அழ வைக்கிறார்கள். அதை மட்டும் சகித்துக் கொள்ளவும்...!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேபிள் இல்லை ஆகவே அவையும் பார்ப்பது கிடையாது...
      நிறைய சேனல்கள் பொறுப்புடன் நடப்பதில்லை... சும்மா அழ வைத்து அவர்களின் ரேட்டிங்கை கூட்டி கொள்கிறார்கள்..

      நீக்கு
  6. கேபிள், செட் டாப் பாக்ஸ் இல்லாம சக்தி டீவியையும் ரூபவாஹினியையும் பார்த்துக்கிட்டு நிம்மதியா இருந்த காலத்தை நினைச்சு பாக்கறேன். ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதே தான் அக்கா.. ஆனால் ஷக்தி ளையும் இப்ப சீரியல் தான்...

      நீக்கு
  7. அப்புறம் நானும் அங்கே இருந்த பொழுது சீரியல்கள் பார்க்க மாட்டேன். சூரியன், சக்தி எஃப் எம் இருக்க கவலை என்ன உங்களுக்கு பேசாம ரேடியோவுக்கு மாறிடுங்க. நிம்மதியா வேலை பாத்துக்கிட்டே பாட்டு கேட்கலாம்.

    (இங்க எஃஎப் எம்மை நீங்க கேக்கணும் சுதர்ஷிணி. :(( )

    பேசாம அங்கயே இருந்திருக்கலாம்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கும் ரேடியோ தான் பெஸ்ட்... இப்ப வெற்றி எப் எம் இருக்கு..
      ஐயோ உங்க ஊர் எப் எம் கேட்டு எனக்கு காது பஞ்சரகிரிச்சு அங்க வந்திருந்தப்போ :(
      பேசாம அங்கேயே இருந்திருக்கலாம் // வாங்க வாங்க வந்திருங்க..

      நீக்கு