புதன், 20 ஜூலை, 2011

எனக்கு பிடித்த பாடல் # 2


M.S அம்மாவின் குரல் போலவே சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலிலும் எனக்கு பெரிய பிடிப்பு உண்டு... அவரது இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது...

லோகமாதாவான துர்கையை சின்னஞ்சிறு  பெண்ணாக எண்ணி கொஞ்சி, வர்ணித்துப் பாடும் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த வரிகாளால் பாடி கொஞ்ச ஒரு பெண் குழந்தை வேண்டுமே என்று ஏங்க வைக்கும் இந்த பாடல்.

பாரதி தன் மானசீக காதலியான கண்ணம்மாவை குழந்தையாய் வரித்து பாடிய இந்த பாடல் வரிகள் நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் குழைந்து விழும் போது....உள்ளம் கொள்ளை போகவிட்டால் தான் ஆச்சரியம்.....


 இந்த பாடல்கள் தரும் சுகத்தை திரை இசையில் வந்த இந்த பாடல் தரும் ... கொஞ்சம் சோகம் கலந்திருந்தாலும் எனக்கு இந்த பாடல் பிடித்தமானது.
இதை போலவே நிலவே மலரே படத்தில் வரும் நிலவே மலரே பாடலும் ஒரு சுக ராகமே...

புன்னையிலை போலுன் சின்ன மணிப்பதம் மண்ணில் படக் கூடாது 
பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக்கூடாது.
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ..
மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ .. 


இன்னும் மீட்டுவேன்.....  

2 கருத்துகள்:

  1. நல்ல பாடல் தொகுப்பு அதுவும் சீர்காழியின் குரலில் அதிகாலையில் கேட்பது இன்னொரு சுகம்!

    பதிலளிநீக்கு
  2. சின்னஞ்சிறு பெண்போலே சூப்பர் பாட்டு.

    ம்ம்ம் மனம் போல் மகள் பிறக்க கதிர்காம கந்தனை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு