சனி, 2 ஏப்ரல், 2011

அமிர்தன் அகராதி !

எத்தனையோ அகராதி பார்த்திருப்போம், கோனார் அகராதி தொடங்கி மண்டையில் கணம் ஏறிய அகராதி மனிதர்கள் வரை, ஆனால் இது ஒரு புது வகை அகராதி. நம்ம அமிர்தன் வச்சிருக்கிற அகராதி உங்களுக்காக மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுகின்றேன்(இது கொஞ்சம் ஓவரோ? :))

அமிர்தன் மொழி மொழி பெயர்ப்பு

அம்மா அம்மா,அப்பா அம்மம்மா,தாத்தா, ஆன்டி,அங்கிள்,......மற்றும் அனைவரும்
அபுல் ஆப்பிள்
ஒயேஞ் orange
கத் cat
த்தூக் dog
கம் (வாருங்கள்) come
லை lion
குக்கு bird
மிக்கி milk
தோச்சி தோசை மற்றும் அடுப்பில் வேகும் எந்த பதார்த்தமும் தோச்சி thaan
நைஸ் nice
வாட்டி water
போட்டி bottle
கிம்மி give me
சித் sit
பீன் pain
பட்டிபை butterfly
பத்தி butter
ஸீஸ் cheese
ஒப்புங்கா off
ஒபீன் open
மிச்சி mixer grinder
டூர் டூர் சத்தம் போடும் எந்த உபகரணமும் (drilling mechin)
கார் கார் மற்றும் வீதியில் போகும் எந்த வாகனமும்
கோவ் crow
சாமி சாமி
ஹன்கி hungry
தேங்கூ Thank you
சொயி sorry
பீஸ் please
இவை தவிர இன்னும் ஏராளமான வார்த்தைகள் இன்னும் மொழி ஆராய்ச்சியில் உள்ளது. அவைகளும் கிடைத்தவுடன் அறியத்தருகிறோம் :)

அமிர்தனுக்கு இன்னும் இரண்டு வயது தான். ஆனாலும் சுட்டிதனதுக்கு மட்டும் வயது 10௦. நாங்கள் இருவரும் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் பேசினாலும் அவருக்கு அனேகமாக ஆங்கிலம் தான் இன்னும் பழகு மொழியாக இருக்கிறது (காரணம் நாம் பழகும் நட்புச் சூழலில் அநேகமானவர்கள் சகோதர மொழி பேசுபவர்கள் என்பதாலும் இருக்கலாம்)
இந்த கொஞ்ச வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவர் கேட்கும் கேள்விகளை புரிந்து பதில் சொல்வதுதான் இப்பொழுது எனக்கு இருக்கும் பெரிய வேலை .
சில நேரங்களில் கஷ்டமாக இருந்தாலும் பல சமயங்களில் புன்னகைக்க தான் வேண்டியிருக்கிறது....


டிஸ்கி
என்னால் ப்ளொக்கரில் நெடு நாட்களாக தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை settings சென்றும் செய்ய வேண்டியதுகளை என்னால் ஆனா வரை செய்து பார்த்து விட்டேன் ஆனாலும் முடிய வில்லை யாராவது விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா... என்னை செய்யலாம்னு.


5 கருத்துகள்:

  1. என் தம்பி சிறுபிள்ளையா இருந்த பொழுது கையை நீட்டி பீஸ் பீஸ்னு கெஞ்சுவான். (ப்ளீஸ் என்று அர்த்தம்) :))

    அமிர்தன் அகராதி படிக்கையில் பல இடங்களில் என் தம்பி, மற்றும் குழந்தைகள் சொல்வது போலவே இருந்தது. (ஆண்டவன் குழந்தைகளின் மொழிக்கு ஒரு அகராதியையும் கூடவே அனுப்பி வெச்சிருந்திருக்கலாம் )

    :))

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி அக்கா....//(ஆண்டவன் குழந்தைகளின் மொழிக்கு ஒரு அகராதியையும் கூடவே அனுப்பி வெச்சிருந்திருக்கலாம் )
    // உண்மை தான் பல சமயங்களில் அவர் என்னை சொல்ல வருகிறார் என்றே தெரியாமல் விளிக்கும் போது நானும் அப்படி நினைப்பேன் :)

    பதிலளிநீக்கு
  3. அமிர்தன் அகராதி - சூப்பர்...:))

    //தோசை மற்றும் அடுப்பில் வேகும் எந்த பதார்த்தமும்//
    எங்க அம்மா செய்யறது எல்லாமும் ஒரே மாதிரி தான் இருக்குனு சொல்லுதோ கொழந்தை... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... நோ டென்ஷன்...:))

    பதிலளிநீக்கு
  4. அழகான அகராதி. என் சின்னவன் ஓபன்(open) என்பதை, “ஓ பண்ணு” என்பான்.

    பிளாக்கரில் language settings தமிழ்தான் இருக்கிறதா? எனக்கும் என்ன செய்யச் சொல்லணும்னு தெரியலை. NHM writer டவுன்லோட் செய்து வைச்சுக்கோங்க.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி ஹுசைன்னம்மா& அப்பாவி ..... தாமதமாக வெளியிட்டதுக்கு மன்னிச்சூ.....

    பதிலளிநீக்கு