திங்கள், 13 ஜூன், 2011

அமிர்தன் உலகம் ....

அமிர்தன் இப்பொழுது ப்ரீ ஸ்கூல் போகிறார்.... 
வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது பொழுதுபோக்கு கொஞ்சம் வித்தியாசமாக படுகிறது எனக்கு... காரணம் அவரிடம் இருக்கும் எல்லா விளையாட்டு பொருள்களையும் புறக்கணித்துவிட்டு தனியாக கற்பனை பாத்திரங்களுடன் உரையாடுவது போல விளையாடுவது போல செய்கிறார்... நிறைய நண்பர்கள், நாய் குட்டிகள், குழந்தைகள் இருப்பதாக பாவித்து அவர்களுடன் விளையாடுவதாக கற்பனை செய்து  தானே பேசி, சிரித்து, அழுது, சண்டையிட்டு விளையாடுகிறார்..... 
சில நேரங்களில் தான் விழுந்து அடிபட்டதாகவோ,அல்லது வேறு ஒரு குழந்தைக்கோ நாய்குட்டிக்கோ அடிபட்டதாக என்னிடம் வந்து முத்தம் வேறு வாங்கிப்போகிறார் :)))

எனக்கு பார்க்க சிரிப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறது :) அந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும் என்று பார்க்க ஆசை தான் ஆனாலும் நாம் இடையிட்டல் குழந்தையின் இனிமை களைந்து விடுமோ என்ற எண்ணத்தில் எட்டி நின்று ரசித்துகொள்கிறேன்...

5 கருத்துகள்:

  1. உண்மை தான் தோழி அவர்கள் உலகம் சூது வாது தெரியாத இனிமையானது இடையில் புகுந்தால்  ஆட்சி போன கருணாநிதி போல் ஆகிவிடும்! உங்கள் எழுத்து இன்னும் தொடரனும் . 
    அம்மாவின் பார்வையில் மகனின் குறும்பை எழுத்தின் ஊடாக ரசிக்கிரேன். 

    பதிலளிநீக்கு
  2. என் வீட்டு வாண்டு கூட அப்பிடித்தான். டெடி பியர் கூட பேசுறது என்ன? மிக்கி மௌஸ் கூட விளையாடுறது என்ன? அது கூட நல்லா தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. நன்றி நேசன்! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

    பதிலளிநீக்கு
  4. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமேஷ் பாபு !

    பதிலளிநீக்கு
  5. சிறுவர்கள் உலகம் ஒரு மாயாயாலம்  அதை கான்பதற்கு அவர்களைப்போல் நாங்கள் இறங்கி வர வேண்டும்..!?

    பதிலளிநீக்கு