புதன், 18 ஏப்ரல், 2012

யாழ் பயணமும் புது வருடமும்

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள் (கொஞ்சம் லேட் தான் மன்னிச்சுடுங்க)

தூரப் பிரயாணம் அதனால் வந்த வேலைப்பளு, ரெண்டு சுட்டிகளை சமாளிக்கும் கடமை, வீட்டிலிருந்தபடியே செய்யும் உத்தியோகச் சுமை இப்படி பல விடயங்கள் இருந்தது அது தான் பதிவுகள் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை.(மனசாட்சி:- இல்லன்ன மட்டும் அப்பிடியே எழுதிக் கிழிச்சிருமாக்கும் இந்த சோம்பேறி)

சித்திரை வருடப்பிறப்பு வழக்கம் போல எங்க அத்தை வீட்டில்(என் புகுந்த வீடு )கலகலப்பாக இருந்தது. என்ன! யாழ்பாண வெய்யில் தான் தாங்க முடியல...
மற்ற படி ரொம்ப ஜாலியா இருந்தது. 
விறகடுப்பு சமையல், சுடச் சுட கறந்த பாலில் தேநீர், இயற்கையாக கிடைத்த மரக்கறிகளிலும், கரையில் இறங்கிய சூட்டுடன் நாங்கள் வங்கி வந்த மீன் நண்டுகளில் சமைத்த சாப்பாடு, இயற்கை காற்று என்று மிக நல்ல சுழலில் ஒரு  வாரம் போனதே தெரியவில்லை.

ம்ம்ம் மீண்டும் கொழும்பில் பால் மா தேநீர், குளிர்சாதனப்பெட்டியில் வைத்த  காய்கறி, அவசர சமையல் என்று வந்து விட்டோம். திரும்பி அங்கு போற வரைக்கும் அவல நினைச்சு உரல இடிப்போம் என்ன செய்ய..

ஆனால் அங்கு சென்றதால்  கிடைத்த சிறு ஓய்வில் நிறைய எழுதுவதற்கான விடயங்கள் கிடைத்தது.. (மனசாட்சி:- இவுங்க பெரிய எழுத்தாளர் அப்பிடியே வானத்த பார்த்து  யோசிச்சிட்டு வந்திருக்காங்க இனி எழுதிருவாங்க எல்லாரும தவறாம வந்து படிச்சிருங்க)
நேரம் கிடப்பதை பொறுத்து பகிர்துகொள்ள ஆவலாக  இருக்கிறேன் ...
(மனசாட்சி:- உங்கள எல்லாம் அந்த ஆண்டவன் தான் காப்பத்தனும் )




7 கருத்துகள்:

  1. இதைத்தான் சொல்லுவது பொல்லுக்கொடுத்து அடிவாங்குவது என்று அப்ப இனி பதிவை எதிர்பார்க்கலாம் ஆவலுடன்!

    பதிலளிநீக்கு
  2. இயற்கை வாழ்வில் இருந்து விட்டு கொழும்பு வரகொஞ்சம் மனசு கஸ்ரப்படும் வேலைக்கு போனால் எல்லாம் போய் விடும்!சுமைகள் பல மேடத்துக்குக்கு!

    பதிலளிநீக்கு
  3. சுமைகள் பல இருக்குன்னு ஒத்துகொண்டதட்கு நன்றி நேசன்...
    அடி கொடுக்க ஸாரி பதிவுகளோடு வருகிறேன் ...

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம் மீண்டும் கொழும்பில் பால் மா தேநீர், குளிர்சாதனப்பெட்டியில் வைத்த காய்கறி, அவசர சமையல் என்று வந்து விட்டோம். திரும்பி அங்கு போற வரைக்கும் அவல நினைச்சு உரல இடிப்போம் என்ன செய்ய..//அந்த வலிகள் பலருக்கு உண்டு!

    பதிலளிநீக்கு
  5. யாழ் பயணம் மட்டும்தான் நான் செய்யலை. நல்லூரானை எப்ப பாக்கப்போறேன்னு தெரியலை. இப்பவும் தமிழ்புத்தாண்டுன்னா உடனே எங்க நினைவலைகள் போவது கொழும்புக்குத்தான். :))

    ஏன் பால்மா தேநீர்? நாங்க இருந்த வரைக்கும் rajagiriya விலிருந்து கறந்த பால் ஒரு தமிழர் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.

    ஆங்கர் பால்மான்னு சொல்லுங்க ஆஷிஷ் அம்ருதா ரெண்டு பேரும் ஓடி வந்திருவாங்க. :))

    தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. வாங்க கலா அக்கா நீங்களும் பயணம் போனீங்க போல வந்து படிச்சிட்டு சொல்லுறேன்.
    நானும் முயன்று பார்த்தேன் கறந்த பாலுக்கு.... சரியானது வாய்க்கவில்லை அதனால் விட்டாச்...
    ஆஷிஷ் அம்ருதா ஓடி வாங்க எங்க வீட்டுல அங்கர் பால் மா தான்,,,
    வரும்போது சொல்லுங்க நானே நல்லூரன்கிட்ட கூட்டிகிட்டு போறேன்,,, அப்பிடியே ஐஸ் கிரீம் குடிக்கலாம்...

    பதிலளிநீக்கு
  7. ம்ம்ம்ம்....! நான் 7 வயதில் யாழ்ப்பாணம் சென்றது தான்...! எனது சித்தப்பாவுக்கு சாவகச்சேரியில் பெண் பார்க்கும் போது...! பிறகு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு முறையாவது யாழ் சென்று விடவேண்டும் என்பது எனது இலட்சியங்களில் ஒன்று...!

    பதிலளிநீக்கு