திங்கள், 9 ஆகஸ்ட், 2010

பெயரிடவில்லை.....

எழுதனும் எழுதனும் என்று நினைச்சாலும் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து முடியாமையே இருந்தது ..... கடைசியில இன்னைக்கு ஒருவழியா வாய்ச்சிருக்கு....

இந் இடுகைக்கு பெயரிடவில்லை
(
ஏன்னா என்ன பெயர் வைக்கன்னு தெரியல்ல )
சில சின்ன சின்ன விஷயங்கள பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்....

*போன மாசம் நம்ம ரங்கஸ் ஆபீஸ்ல அன்னுவல் டூர் போய் இருந்தோம்(பொலன்னறுவ ) ஹோட்டல் ரிசெப்ஷன் எல்லாம் நல்லா தான் இருந்துது ஆனா ரூம் ஒண்ணுமே உருப்படி இல்ல, ஒரு மாசத்துக்கு முன்னாடியே கிளீன் பண்ணி பூட்டி வச்ச ரூம அப்பிடியே திறந்து தந்தாங்க, சண்டை போட்டு வேற ரூம் வாங்கிக்க வேண்டியதாப்போச்சு...

*சாப்பாடு வாய்ல வைக்க முடியல்ல. டைனிங் எ ஹால் போனதுல இருந்து வரும் வரைக்கும் திட்டிகிட்டே இருந்தோம் .....

*வேற வேற பேருல ஒரே ஐட்டத்த மாத்தி மாத்தி வச்சு கொலை பண்ணிட்டாங்க....

*இந்த ஹோட்டலுக்கு யாருங்க ஸ்டார் அதுவும் பைவ் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தது???????????

*மத்தபடி சுற்றுபுறம் ரொம்ப நல்லாவே இருந்துது அதுவும் ஹோட்டலுக்கு எதிர்ல இருந்த லேக் ரொம்ப , இருந்தது.... அது தான் இங்க இருந்த ஒரே ஆறுதல்.
---------------------------------------------------------------------------------------------------

அமிர்தன் இப்ப ரொம்ப பெரிய ஆளா ஆகிட்டாரு... தானா அப்பாவோட கம்ப்யூட்டர் சேர் மேல ஏறி மவுஸ் தட்டுராறு.....
அவர சமாளிக்கிரதுக்குள்ள எனக்கு முழி பிதுங்குது (ஆனாலும் ரசிக்கத்தான் தோணுது )
-----------------------------------------------------------------------------------------------------
இராவணன் படம் பார்த்தோம்......( "என்னது காந்தி செத்துட்டாரா " அப்பிடின்னெல்லாம் கிண்டல் பண்ணப்படாது நானே 3 மாசம் கழிச்சு பதிவு போடுறேன் ஆமா சொல்லிபுட்டேன் ) எனக்கு பிடித்தது, அமிர்தன் ரொம்ப ரசிச்சு கைதட்டி பார்த்தான் :) (அவன் தியேட்டரில் பார்க்கும் இரண்டாவது படம் இது ...... )


இன்னும் நிறைய கதை இருக்கு ..... அதை எல்லாம் அடுத்த பதிவுல சொல்லுறேன் இப்போதைக்கு தொடரும் போட்டுக்கறேன் (அப்பாடா ஒரு தொடரும் போட்டாச்சி :) )

6 கருத்துகள்:

  1. // "என்னது காந்தி செத்துட்டாரா " அப்பிடின்னெல்லாம் கிண்டல் பண்ணப்படாது //

    கிண்டல் பண்ண மாட்டேன்... நானும் போன வாரம் தான் பாத்தேனுங்க... ஆனா இப்படி கிண்டல் பண்ணுவாங்களோனு வெளிய சொல்லல... ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  2. I missed to put these comments in October 2010, so adding now...:)))

    sari sari no tension...:)))

    //என்ன பெயர் வைக்கன்னு தெரியல்ல )
    சில சின்ன சின்ன விஷயங்கள பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்//
    இந்த மாதிரி மேட்டர்க்கு பொதுவா எல்லாரும் கொத்துபரோட்டா... கிச்சடி... னு எதுனா "புதுமையா" பேரு வெப்பாங்க... நீங்களும் அது போல ஏன் யோசிக்க கூடாது...:))))

    //இந்த ஹோட்டலுக்கு யாருங்க ஸ்டார் அதுவும் பைவ் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தது???????????//
    நாலு பேரு நாலு விதமா தப்பா பேசினா four ஸ்டார்... ஒரு வேள இந்த ஹோட்டல் பத்தி அஞ்சு பேரு அஞ்சு விதமா பேசி இருப்பாங்களோ...:)))

    பதிலளிநீக்கு
  3. //ரசிக்கத்தான் தோணுது//
    Cute ...:))

    //அமிர்தன் ரொம்ப ரசிச்சு கைதட்டி பார்த்தான்//
    சிறு குழந்தைக்கு கூட புரியும் படி படம் எடுத்து இருக்கார் நம்ம மணி சார்... வாழ்க வளர்க...:)))

    பதிலளிநீக்கு
  4. //இப்போதைக்கு தொடரும் போட்டுக்கறேன்//

    உங்ககிட்ட நாங்க கத்துக்க வேண்டியது நெறைய இருக்கும் போலியே... ஸ்ஸ்ஸ்பப்பா... எப்படி எல்லாம் பதிவு எண்ணிகைய கூட்டுறாக.... "அத நீ சொல்றியா"னு யாருங்க அது.... இப்ப நாம பேசறது இவிகள பத்தி மட்டும் தான்.. நம்ம பஞ்சாயத்து தனி...:))))

    பதிலளிநீக்கு
  5. இப்படி சும்மா சும்மா கமெண்ட் போட்டாலாச்சும் போஸ்ட் போடறீங்களானு பார்ப்போம்...ஜஸ்ட் கிட்டிங்... ஹா ஹா... :))

    பதிலளிநீக்கு
  6. அப்பாவி அக்கா .....! எனக்காகவும் ஒரு ஜீவன் கமென்ட் போடுறத பார்க்க எனக்கு ஆனந்த கண்ணீரா வருது :))))
    என்னோட கம்ப்யூட்டர் ரொம்ப நாளா மக்கர் அது மட்டும் இல்லாம கொஞ்சம் வேலைகளும் வந்து சேர்த்துவிட்டது அது தான் உங்க கமெண்ட் கூட போடா முடியல... இப்பவும் கம்ப்யூட்டர் கொஞ்சம் மக்கர் தான் (தமிழ் தட்டச்சு முடியவில்லை ) இருந்தாலும் இன்னொரு வழி கண்டுபிடிச்சிருக்கிற படியல உங்கள எல்லாம் ஒருவழி பண்ணலாம்னு இருக்கிறேன்....:)

    பதிலளிநீக்கு