பொதுவாக நான் எல்லா பண்டிகைகளையும் முறையாக கொண்டாட ஆசைப்படுவேன் .கல்யாணம் ஆகும் வரைக்கும் அப்பா அம்மா தம்பி தங்கை என்று எல்லோரையும் பெண்டு நிமிர்த்தி வேலை வாங்கி முடிந்தவரை சிறப்பாக கொண்டாடுவேன் (எங்கள் வீட்டில் அனைவரும் கொஞ்சம் அமைதியான சுபாவம் என்னை தவிர ). சின்னப் பெண்ணாக இருக்கும் போது தாத்தா ,பாட்டி, ,அப்பா ,அம்மா எல்லோரிடமும் இதற்கு என்ன அர்த்தம் அதற்கு என்ன அர்த்தம் என்று குடைந்து கொண்டே இருப்பேனாம், கொஞ்சம் வளர்ந்ததும் நானே வாசித்து பொருள் விளங்கி செய்ய ஆரம்பித்தேன்.
கல்யாணம் ஆனா பின் இப்போது நம்ம ரங்கமணி தனியாக மாட்டிக்கொண்டார். எல்லா பண்டிகை விழாக்களையும் எனக்கு தேவையான படி செய்து முடிக்க உதவி செய்தே அவருக்கு நுரை தள்ளிவிடும் (இருந்தாலும் கொஞ்சமும் முகம் சுளித்ததோ சலித்து கொண்டதோ இல்லை) . இந்த இரண்டரை வருடத்தில் எல்லா பண்டிகைகளையும் என் மனம்போல நிறைவேற்றி தந்திருக்கிறார்.
இந்த வருடம் எங்கள் புது வரவான அமிர்தவர்ஷன் உம் இருப்பதால் அவரின் முதல் தைப்பொங்கலை நன்றாக கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்.
எப்படி கொண்டாடினோம் என்பதை நாளை மறுநாள் சொல்கிறேன் .
நாளை பிறக்கவிருக்கும் தைத்திருநாள் அனைவருக்கும் நல்ல வளங்கள் அனைத்தையும் நல்கும் நல்லதோர் வருடத்தின் ஆரம்பமாக இருக்க எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்களுடன்
சுதர்ஷினி ,ரமேஷ் மற்றும்
சுதர்ஷினி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குநன்றி ஹுஸைனம்மா :)
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துககள் உங்களுக்கு்ம் வர்ஷனுக்கும்!
பதிலளிநீக்குநன்றி டீச்சர்
பதிலளிநீக்குஇனிய பொங்கள் வாழ்த்துக்கள்- உங்கள் குட்டிப்பையனுக்கும்!
பதிலளிநீக்குரொம்ப நாளா ஒன்னும் எழுதக்காணோம்?? என்ன ஆச்சு??
பதிலளிநீக்குஎன்னை தட்டி எழுப்பினதுக்கு நன்றி அண்ணா இதோ தொடங்கிட்டேன்
பதிலளிநீக்கு