சனி, 28 நவம்பர், 2009

EID Mubarak


இன்று ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது உளம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

மழை நினைவு....

எப்பொழுது மழை பெய்தாலும் சில
நினைவுகளும் கூடவே நனைய
வந்துவிடுகின்றன......
குடையிருந்தும் நனைந்த
பல நாட்கள்!
குடையின்றி நனைந்த
சில நாட்கள்!

"கவிதை" கிறுக்கிய
சில இரவுகள்
கவிழ்ந்து படுத்த
பல இரவுகள்

கண்ணீர் கரித்த
சில தருணங்கள்
கனவுக்குள் மிதந்த
பல தருணங்கள்

இப்படியிப்படி எத்தனையோ
நினைவுகள்............
இன்றும் மழை தான்
ஆனால் நினைவுகளில்
நீ மட்டும்..................


பி . கு
ஏதோ எனக்கு தோணினதை எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதியிருக்கிறேன்.......
நல்ல இருந்தா சொல்லுங்க சந்தோஷப்பட்டுகிறேன், இல்லன்ன திருத்தங்கள் இருந்தாலும் சொல்லுங்க திருத்திக்கிறேன்..........

செவ்வாய், 24 நவம்பர், 2009

ஞாயிறு ஷாப்பிங் .........

சென்ற ஞாயிறு பொருட்கள் வாங்க வேண்டிய தேவை இருந்தது ஆனாலும் நம்ம "ரங்கமணி" (நாமலும் நிறைய ப்ளாக் படிக்கிறோம் இல்ல அதான் ) கொஞ்சம் பிஸியா இருந்துட்டதால கொஞ்சம் நேரமாயிடுச்சு சரி புறப்படலாம்னு பார்த்தா நம்ம தவப்புதல்வருக்கு அப்பத்தான் தூக்கம் வருது :(....
எல்லாத்தையும் சரி பண்ணி புறப்படும் போது மணி ஏழு :((((((((((
நமக்கு தான் பத்து மணி வரைக்கும் சூப்பர் மார்க்கெட் இருக்குதே அப்பிடின்னு சமாதானம் பண்ணிக்கிட்டு கிளம்பி போனோம். அங்க போயி ஷாப்பிங் பண்ண தொடங்கும் போது தான் நம்ம ரங்கமணிக்கு மச்சினி சொன்னது நினைவு வந்து என்ன கேட்டாரு " ஏம்மா உன் தங்கச்சி ஏதோ economical centre பத்தி சொன்னாளே இப்ப போய் பார்க்கலாமா "
ஆனா சும்மா சொல்லகூடாது உண்மையிலேயே நல்ல தெரிவு தான்
எல்லா பொருளுமே இருக்கு அதுவும் மத்த இடங்கள விட கம்மி விலையில கிடைக்குது. சூப்பர் மார்க்கெட் மாதிரி இருந்தாலும் தனி தனி கடைகளா இருக்கு.
ஆஹா ! இவ்வளவு நாளும் தெரியாம போச்சேன்னு நினைக்க வச்சிது.
முக்கியமா நிறைய பார்கிங் வசதி இருக்குது. நாலு மணியில இருந்து நள்ளிரவு வரைக்கும் திறந்து இருக்கிறதுனால வேலைக்கு போறவங்களுக்கும் ரொம்பவே வசதி. (ஞாயிறும் திறந்திருக்கும் , பௌர்ணமி நாள்ல மட்டும் விடுமுறை )

கொழும்பு வாழ் மக்களுக்கு இத்தாள் தெரிவிப்பது என்னன்னா நல்ல பொருட்கள் மலிவான விலையில பெற்றுக்கொள்ள நாடவேண்டிய இடம் Narahenpita கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள economical centre ................


மீண்டும் சந்திக்கிறேன்

புதன், 18 நவம்பர், 2009

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!

அனைவருக்கும் இந்த புதிய பதிவரின் வணக்கங்கள் ..............
நிறைய வாசிக்க மட்டும் செய்கிறாயே கொஞ்சம் எழுதக்கூடாதா என்று என்னவர் கேட்பதால் சரி! எழுதிதான் பார்ப்போமே என்று வலைபதிவு முகவரி ஒன்று தொடங்கியாயிற்று,ஆனால் என்ன எழுதலாம் என்று யோசித்து கொண்டிருந்ததில் சில பல நாள் ஆகி விட்டது (அதிகமில்லை மூணு வருசம் தாங்க ஆச்சு ).
இனி கொஞ்சம் எழுதலாம் என்று இருக்கிறேன்.
நான் கண்ட கேட்ட அனுபவித்த என்று கொஞ்சம் எழுதுகிறேன் ஆதரவு தாருங்கள் .

நன்றிகளுடன்
காற்றின் கீதம்